என்றும் என் நினைவில் நிற்கும் கவிஞனுக்கு

(24.06.2016)


கவிஞரின் பாடல்களில்
மயங்காதார் உண்டோ

கவிஞரின் கவிதைகளில்
உருகாதார் உண்டோ

கவிஞரின் தத்துவங்களை
ரசிக்காதார் தான் உண்டோ

நீயும் தமிழும் பின்னிப் பிணைந்து விட்டீர்களே

அதனால் தான் தமிழ் உன்னிடம்

கொஞ்சி குலாவியதோ

நீயும் தமிழ் தாய்க்கு
வஞ்சனை இல்லாமல்
உன் கடமையை செய்து விட்டாய்

எப்படி உன்னால் மட்டும்
இது முடிகிறது

அந்த ரகசியத்தை தமிழ்
தாயிடமே கேட்டுக் கொள்கிறேன்

நீ எழுதாத விஷயங்கள் தான் உண்டோ

நாத்திகத்தின் ஆரம்பம் எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம்

ஆனால் அது ஆத்தீகத்தில் தான் முடியும்

என்பதற்கு நீ தான் சரியான
உதாரணம்

அதன் சாட்சி தான்,

மனித இனம் எவ்வளவு பிறவி எடுத்தாலும்,

உன் எழுத்துக்கள் அவர்கள்
வாழ்விலும்

பின்னி பிணைந்து இருக்கும்

உன் பாடல்களை கேட்கும்
பொழுது

ஒரு இனம் புரியாத சுகம்
மனதை வருடுகிறதே

அதை என்னவென்று சொல்ல.

உன்னை என்றும் மறவாத

உன் ரசிகன்

தேதி - 23.06.16. நேரம் - இரவு - 10.50 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (23-Jun-16, 11:19 pm)
பார்வை : 291

மேலே