பெண்ணிடம் என் கவி கூறும் கவி
"அழகிய தமிழ் மகள்" எனக்கான அடையாளம் ..
அழகிற்கு என்றுமே நீ தானே அடையாளம் ..
உன் பிம்பம் பொய் என்று ஆண் மகன் அறிந்தான்..
அவன் கண் வழி உனை பார்த்து நானும் வியந்தேன்.
அழகை அழகென்று சொல்லவே அழகென்ற சொல் உண்டு..
ஆனால் அழகை அழகாய் சொல்லும் திறமை எனக்கு மட்டுமே உண்டு..
உன் கார்குழல் தீண்டி ரசித்த காற்று,
காணாமல் போனதடி காதல் பயத்தில்..
உன் பொட்டு வைத்த முகத்தின் பொலிவினை கண்டு,
சூரியனும் சிவந்ததடி மாலை நேரத்தில்..
உன் இடை என்னும் இடைவெளியை இடைவிடாமல் பற்ற,
இதயங்கள் துடிக்குமடி ஆண் எண்ணத்தில்..
உன் நடை எனும் நாட்டியத்தின் நளினத்தை கண்டு,
பரதமும் பிறந்ததடி உன்னிடத்தில்..
உவமையை உரிமையாய் நான் கொண்டு என்ன,
உன் தலை முதல் கால் வரை நான் கண்டு என்ன.
வர்ணிக்க வார்த்தைகள் எனை சூழ்ந்து என்ன
என் வாழ் நாளில் முடியாததை நான் ஏற்று என்ன
உன் அழகில் என் உயிர் என்று ஆண் மகன்கள் என்ன
நான் தோற்பதும் பிறப்பதற்கே என் அழகே..
--அழகிய தமிழ் மகள்