அவளுக்காய்

என்னிடம்
ஆசைகளும் இல்லை
காசுகளும் இல்லை
நம் காதலை தவிர........

அன்று
தாயாக நான்
உன்னை நினைத்த போது
என்னை அனாதையாய் தவிக்க வைத்தாய்
இன்று.......


உன்
விழிகள் கண்டதும்
என் வலிகளும் மறைந்துவிடும்
அவ்வளவு வைராக்கியம்
பிடித்த முத்தடி
உன் விழிகள்........


அழகுக்கும் அழகாயுள்ளது
உன் கழுதுக்கு
நீ இட்ட மாலை.........


மனசுக்குள் மயங்கி
உயிருக்குள் உறவாடிய
நேரம் இதுவா
ஏன் நேரம் மறந்து போகின்றது
என்
காதல் கல்லறை நோக்கி
பயணிப்பதனாலா.....,...?


மறையாத ஞாபகங்கள்
என் மீது
வந்து விளையாடுகின்றன
நீ விளையாட்டாய் என் ஞாபகங்களை
விரட்டியதனால்.....,!


பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (24-Jun-16, 10:47 am)
Tanglish : avalukkai
பார்வை : 103

மேலே