கண்ணதாசா
மனதில் வருவதை மட்டுமே
பாட்டில் வைத்தாய்
உன்னை நீ அமைதிப்படுத்த
நடு நடுவே
Bottle வைத்தாய் ..!!
அதன் பயனாய் கிடைத்த
அனுபவத்தை
அர்த்தமுள்ள மதமாய்
எத்தனை விதமாய்
என்னுள் விதைத்தாய்..!!
மது ஒரு போதும்
thoughtஇல் இல்லை
எழுதும் போது
பாட்டில் இல்லை
என்பதை
உன் பாடலால் உணரவும் வைத்தாய்..!!!
எத்தனை எத்தனை உணர்ச்சிகளை
கொடுத்து வைத்தாய்
பாடல் வரிகளிலே
நிரப்பி வைத்தாய்
செய்ததையே சொல்லில்
வைத்தாய்
சொல்லில் அத்தனையையும்
உண்மையையே வைத்தாய் ..!!
நீ கவி தாய்
இன்று
உன் புகழை பாடும்
என் செவ்வாய்
நாளை
மனித இனம் தோன்றும்
அந்த செவ்வாய் ..!!!!!
வாழ்க கண்ணதாசா ... என் வாலியின் உயிர்நேசா... வாழ்க கவிஞரே .....!! பிறந்த நாள் வாழ்த்துக்கள்