ரம்லானின் சிறப்பு=================படித்ததில் பிடித்தது ---- வாபரன் தோழன் அய்யப்பன்
நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையானவைகள் தண்ணீர் ,உணவு நல்ல
தூக்கம் ,,,, இவைகளை இந்த ரம்லான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தியாகம்
செய்து மனதில் அந்த இறைச்சக்தியையே நினைவில் கொண்டு வழிபடுகிறார்கள்..
இப்படி அவர்கள் எல்லாமே தியாகம் செய்வதால் அவர்களுக்கு பாவமன்னிப்பு
கிடைத்து விடுகிறது அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாபங்கள்
கரிக்கப்படுகின்றன , இந்தநோம்பில் சிறுவர்களும் பங்கு ஏற்கின்றனர்
இதைச்செய்வதில் அவர்களுக்கு நல்ல பதவி கிடைத்துவிடுகிறது ,இந்தப்பதவி
என்ற சொல்லிலேயே நோன்பு நூற்கும் விதம் நம்க்குக் கிடைத்து விடுகிறது
பதவியில் இருக்கும் முதல் எழுத்து " ப" அதாவது பசி ,,,அந்தப்பசியைத்
தியாகம் செய்தல் இரண்டாவது எழுத்து "த" அதாவது வம்பு இல்லாமல் தனியாக
இறைநாமத்துடனும் அவன் தியானத்துடனும் இருத்தல் ,மூன்றாவது "வி" அதாவது தூங்காமல் விழித்திருத்தல் அந்த விழிப்பும் முழுமையாக இறைவனின் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் இந்த மூன்றும் மிகசிரத்தையாகச் செய்தால் பதவி கிடைத்து விடும் என்ன பதவி ?ஆபீஸில் உயர்வா ? இல்லை இந்த வாழ்க்கை
எடுத்ததின் அர்த்தம் புரிந்துவிடும் இறைவனிடத்தில் உயர்ந்த பதவி கிடைத்துவிடும்
ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதம் இந்த ரம்லான் நோம்பு வருகிறது என்று
படித்தேன் இந்தக்கடுமையான நோம்பினால் செய்த பாபங்கள் அழிந்து விடுகின்றன . இந்த ரமலான் மாதக் கடைசியில் தான் இறைமறையான் "திருகுர்ரான்"
திரு முகம்மது நபி அவர்களுக்கு அருளப்பட்டது என்று தெரிந்துக்கொண்டேன்
ஹிந்து மதத்தில் வேதம் என்று எடுத்துக்கொண்டால் அதைப்
படிப்பது என்றோ சொல்வது என்றோ சொல்வதில்லை வேதம்
ஓதுவது என்பார்கள் .அதேபோல் திருகுர்ரானும் ஒரு வேதம்
அதன் பொருளே "ஓதக்கூடியது " என்று ஒரு அனபர் சொன்னார் ,
இந்நூல் முப்பது பாகங்களைக்கொண்டது 114 அத்தியாயங்கள்
இருக்கின்றன .6666 வசனங்களைக்கொண்டது .
இந்த மதத்தைச்சார்ந்தவர்கள் ஒரு நாளில் 5 தடவையாவது ஒரு முறை ரயில் வண்டியில் ஒரு இஸ்லாம் நண்பர் மூன்று முறை முழங்காலை மண்டியிட்டு இந்த தொழுகையை விடாமல் செய்தது என் உடலைச்சிலிர்க்க வைத்தது ,எல்லாமே சிரத்தையும் நம்பிக்கையும் தான் சீரடீ பாபா அவர்கள் அடிக்கடி இதையே சொல்லுவார் ,"சிரத்தா ஸ்வேரி "
என்று ,,,,ரம்லான் மாதக்கடைசி நெருங்க நெருங்க அவைகள் மிகவும் சிறப்பு
நாடகளாகக்கருதப்படுகிறது அந்தக்கடைசி பத்து நாட்களில்
ஓர் ஒற்றைப்படை இரவு மிக முக்கியம் அமசம் பெற்றது இந்த இரவில் தான்
குர்ரான் அருளப்பட்டதாம் இந்த இரவில் தான்
இறையருளைச்சுமந்தவாரு "ஜிப்ரயில்" சில வானவர்களுடன்
பூமிக்கு வந்து ஆசி தருகிறாராம் ,
இந்த ரம்லானில் எனக்கு மிகப்பிடித்தது தன் சக்திக்குத் தகுந்தாற்போல்
தானம் செய்வது ..ஒவ்வொருவரும் தன் சம்பாத்தியத்திற்குத் தகுந்தாற்போல்
தன் தேவைக்கு மேல் எத்தனை இருக்கிறது அதில் 21/2 சதவீதம் தானம் செய்யவேண்டும்
இதை "ஜகாத்" என்கிறார்கள் ஆஹா என்ன அருமையான் யோசனை . தானமே சிறந்தது தான் அதிலும் அன்னதானம் மிகசிறந்தது , இந்த மாதத்தில் தானங்கள் செய்ய கொடுக்க கொடுக்கக்குறையாமல் செல்வம் வளரும் வாழ்வு வளம் பெரும் இந்த நன்நாளில் சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு நரக வாசல் அடைக்கப்பட்டு இருக்கும்
இதைப்பார்த்தால் வைகுண்ட ஏகாதசி ஞாபகம் வருகிறது
அதிலும் அந்த ஒரு நாள் நரகவாசல் மூடப்பட்டு சுவர்க்க வாசல் காலை 4 மணிக்கு திற்க்கிறது பாபங்கள் அழிந்து மோக்ஷ்பாதை கிடைக்கிறது
இந்த விரத்ம் போல் ஹிந்து மதத்தில் சபரிமலைக்குப் போகும்
விரதம் உள்ளது ஒரு மண்டலம் 48 நாடகள் கடும் விரதம் கொண்டு காலில்
செறுப்பில்லாமல் மூன்று முறை ஸ்னானம் செய்து இரவில் பால் பழம் மட்டும்
உண்டு பின் நல்ல நாளில் இருமுடிஏற்றி நடந்து சபரிமலை ஏறி ஸ்வாமியே
சரணமய்யப்பா என்ற முழக்கத்துடன் அந்தக்கடைசி 18 படிகளும் ஏறி அந்த ஐய்யப்பனைக் கண்டு பரவசமடைகிறான் அவனது ஜன்ம சாபலயம்
பூரணமாகிறது இதில் சிறுவர்களும் வயதானவர்களும் கூட பங்கு
பெறுகின்றனர் ,எல்லாமே நம்பிக்கை சிரத்தை சமர்ப்பணம் என்று
மூன்றுசொற்களின் அஸ்திவாரத்தில் தான் அழகான ஆன்மீக
அரண்மனை கட்டபடுகிறது
என் இனிய ரம்லான் வாழ்த்துகள்
அன்புடன் விசாலம்