நானாகிய நீ

காலைச் சூரியன்
கடுமையாய்
கொதிக்கிறான்...
இன்னும் நீ
கண்ணவிழவில்லை!
புள்ளினம் மெல்ல
பூபாளிக்க
துவங்கிவிட்டன...
நீ
அடுக்களை நுழைகிறாய்!
பாதக் கொலுசு
பாவி நெஞ்சில்
சுப்ரபாதம் ஒலிக்கிறது...
நீ
வாசற் தெளிக்கிறாய்!
ஈரந்தோய்ந்த உடையுடன்
கூந்தல் உலர்த்துகிறாய்
நீ...
நெருப்பென
கொதிக்கிறது என் தேகம்!
உன்
கைவளைச் சிணுங்கலில்
என் பேனா
மைநிறைத்துக்
கொள்கிறது!
உன்
சிரிப்பொலியென்
சந்தமாகிறது!
நீ
வீசிய மிட்டாய்த் தாள்
சொந்தமாகிறது!
உன் கண்ணுதிர்த்த
மைத்துகளில்
சாயமேற்றிக் கொள்கிறது
மேகம்!
நீ பூசும்
முகப்பூச்சில்
வெளுத்துப் போகிறது
வானம்!
குழந்தையென
முறுவலித்து
குறும்பாய்
நீ செய்யும் அபிநயம்
கோடி வார்த்தைகள்
கிறுக்கிப் போகிறது
என் தாளில்!
வண்ண வண்ண
புத்தகங்கள்
மார்போடு அணைத்தபடி
நீ
பாடசாலை
நுழைகிறாய்...
நான்
உன்னை படிக்கிறேன்!
குனிந்த தலை நிமிராமல்
ஏதேதோ
நீ எழுதுகிறாய்...
கல்வெட்டாகிறது
என் இதயம்!
தினசரி நீயெழுதும்
நாட்குறிப்பென
நிழலாகப் பின் தொடர்ந்து
நினைவாலே
அலைகிறேனே...!
குறைந்தது
என் முகமாவது
உன்
நினைவிலுண்டா?!
சந்நியாசி பிள்ளையாரை
சுற்றியது போதும்!
சல்லடையாய்
சிறு பார்வை
பார்த்துதான்
தொலையேன்!!
விட்டிலென்றாவது
வாழ்ந்துவிட்டுப்
போகிறேன்!!!
***********************

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (25-Jun-16, 9:09 am)
Tanglish : naanakiya nee
பார்வை : 161

மேலே