நீ புரிந்து கொள்வாய் என்று

ஒரு உவமை வைத்தேன்
நீ புரிந்து கொள்வாய் என்று..
ஒரு உருவகம் வைத்தேன்
நீ மிக ரசிப்பாய் என்று..
என் கவிதையை உன்னிடம்
படித்துக்காட்ட வந்தேன்..
நீயோ "தமிழ் இலக்கணம் புரிந்துகொள்வது எப்படி?"
என்ற நூல் படித்துக் கொண்டிருந்தாய்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-16, 9:23 am)
பார்வை : 420

மேலே