புன்னகை சிந்தும் பூக்கள்

நான் காணும் நேரமெல்லாம்
எழில் புன்னகை பூத்தவளே! தினம்
உன் கண் ஜாடையால்
என் நெஞ்சைக் கிள்ளியவளே !

உனக்கு நான் அடிமையான பின்னும்
பேசாமல் என்னை வதைப்பது சரியோ?

பூவே! தினம்
உன்னைத் தீண்டும் பொருளாகவே
நான் இருக்க வரம் கேட்டேன்
இல்லா சாமிதான் எனக்கு தரவில்லை
இருக்கும் நீயாவது
நான் கேட்ட வரம் தருவாயா?

அன்பே! ஆசை அழகே !
நான் உன் மீது கொண்ட காதலால்தான்
தினமும் நான் சிரித்துக் கொண்டே சாகிறேன்
அழுது கொண்டே வாழ்கிறேன்

இவ்வுலகில் காதல் ஒன்றுதான்
உருவாக்குவதும் கடினம்
உருவான பின்னே
பிரிந்த பெண்ணே
மறப்பதென்பதும் கடினம்தான் !

பென்சில் கோடாய்
நீ என்னை நினைத்து அழித்து விட்டாய்
ஆனால் நானோ
என் நெஞ்சில் பச்சையல்லவா குத்திவிட்டேன் !
என்ன செய்வது
என் காதலை அழிப்பதென்பது
கடினம்தான்!
பெண் பின்னால் அலையும் ஆண்கள் எல்லாம்
பாவப்பட்ட ஜென்மங்கள்தான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (26-Jun-16, 3:13 pm)
பார்வை : 150

மேலே