காதல் பைத்தியம்
கடல் அலை ஓய்வதுமில்லை
உண்மைக் காதல் அழிவதுமில்லை
கண் இல்லாமல் கூட வாழ்ந்திடலாம்
காதல் கொள்ளாமல் வாழ்வது யார்?
கால் இல்லாமல் கூட கரை கடந்து செல்லாம்
சுவாசக் காற்று இல்லாம் எங்ஙனம் வாழ்வது!
கடலின் ஓசை இசையாகும்
மனதின் ஆசை காதலாகும்
இருமணம் இணைந்தால்
அது திருமணமாம்
ஒருவரை ஒருவர் விரும்பினால்
அது தவறாகுமாம் பிணமாக்குவார்களாம்
இளமை இல்லையேல் ஏது இன்பம் ?
நெஞ்சில் காதல் கனிந்து விட்டால்
உண்மைக் காதலை காலம்தான் என்ன செய்யும்?
அளவுக்கு அதிகமானால்
அமிர்தமும் நஞ்சு என்பார்கள்
அது முற்றிலும் உண்மைதான்
அளவுக்கு அதிகமாய்
உன்னை நான் விரும்பியதால்
தூய அன்பால் இன்று நான்
காதல் பைத்தியமாய்...!