நம்பி கை வை
இக்கரைக்கும் அக்கரைக்கும்
இடைதனில் இருப்பதுதான் வாழ்க்கை
அதில் இன்பம் என்பதும் பக்கமில்லை
துன்பம் என்பதும் துரமில்லை
இவ்விரண்டும் நான் செய்யும்
செயலைப் பொருத்துதான் தோன்றுமே
வாழ்வில் ஒவ்வொரு நாளுமே!
நல்லது செய்யும் பொழுது
வாழ்வில் வசந்தம் தோன்றும்
தீங்கொன்று செய்யும் பொழுது
வாழ்வில் வசந்தம் எப்படி மலரும்?
துயரம் வந்து நம்மை தீண்டும்போது
துணிந்து நின்று போரிட்டால்
துயரத்தக் கொன்று -நீ
இன்பத்தைப் பெறலாம்
இல்லையேல் நீயும் இருளில் வீழ்ந்து
இன்பத்தைத் தொலைக்கலாம்
இன்னுயிரையும் நீ மாய்க்கலாம்
எதையும் சந்திக்க துணிந்து விட்டால்
தன்னம்பிக்கை உனக்குள் பிறந்து விட்டால்
அந்த எமனையும் யாரென்று கேள்வி கேட்கலாம்