குணம்

உன் அகன்ற மார்பும்
அழகான தேகமும்
நேற்று என்னைக் கவர்ந்தது

வஞ்சமில்லா வார்த்தையும்
மென்மையான உள்ளமும் கொண்டு
என்னை இன்று கவர்ந்துவிட்டாய்

நாளைக்கு என்னை நீ
மணக்காமல் போனால்
என் வாழ்க்கை என்னாவது ?

என் கண்ணில் தூசுபட்டுருந்தால்
மருத்துவரிடம் சென்று சரிசெய்து விடலாம்
என் நெஞ்சம் மாசுபட்டுவிட்டதே
அதை எவரிடம் சென்று சரி செய்வது?

அன்பே! உன்னைத் தவிர
வேறு யாராலும் அதைக் குணப்படுத்த முடியாது!

கனவுக் கன்னியாய் இருந்த நான்
உனக்கே காதலியானேன்
காதலியாய் இருந்த நான்
உனக்கே துணைவியுமானேன்

அதற்காக என்னை
உன் வீட்டு தாதியாய் ஆக்கிவிட்டாயே!
உன்னாசை அவ்வளவுதானா?
நான் உன்னை விரும்பியதற்கு
சரியான தண்டனைதான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (26-Jun-16, 2:57 pm)
Tanglish : kunam
பார்வை : 75

மேலே