இந்திய இசையமைப்பாளர் ஆர்டிபர்மனின் பிறந்தநாளை முன்னிட்டு டூடில் வெளியிட்ட கூகுள் நிறுவனம்

மும்பை: இந்தியத் திரைப்பட பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடில் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது
-பாலிவுட்டில் கோலோச்சிய இசை மேதை எஸ்டி பர்மனின் மகன்தான் ஆர்டி பர்மன். லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லேவை திருமணம் செய்து கொண்ட பர்மன் தனது இசை பயணத்தில் சகோதரிகள் இருவருடனும் இணைந்து பல பாடல்களை ஒன்றாக பாடியுள்ளார்.375-க்கும் அதிகமான படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய ஆர் டி பர்மன், கடந்த 1994ம் ஆண்டு ஜனவரி 4ந்தேதி மரணமடைந்தார். அவர் இசையமைத்து அவரது மரணத்துக்குப் பின் வெளியான 1942 எ லவ் ஸ்டோரி படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிப் பெற்றன.அவர் மரணமடைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் பாலிவுட்டிலும் சரி, உலகளாவிய இசை ரசிகர்களாலும் சரி... ஆர் டி பர்மன் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மங்கேஷ்கர் தனது ட்விட்டர் செய்தியில், இன்று ஆர்.டி. பர்மனின் (பஞ்சம்) 22வது நினைவு தினம். அவரது இசை மற்றும் நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. வருங்காலத்திலும் அவரது இசை தொடர்ந்து அதிசயத்தை நிகழ்த்தும் என நான் நம்புகிறேன்.அவருக்கு என உளப்பூர்வ அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன்," என தெரிவித்துள்ளார்.ஆர் டி பர்மன் இசையில் பல நூறு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர் என்பது குறிப்பிடத்தக்கது




-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (27-Jun-16, 6:05 pm)
பார்வை : 28

மேலே