பாவம் செய்யத் தூண்டுவது எது

க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாவம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாவம் செய்யத் தூண்டுவது எது? – அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாவம் செய்யத் தூண்டு வது ரஜோ குணத்திலி ருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவ தில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே கார ணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள் என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

நெருப்பு புகையினாலும், கண்ணாடி அழுக்கினாலும், கருவானது கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல் ஞானம் ஆசையால் மூடப்பட்டுள்ளது. குந் தியின் மகனே! தீயைப்போல் தணிக்க முடி யாததும், தீர்க்க முடியாததும் ஆன காமம் தான் ஞானியின் அறிவை மூடிக் கொண்டி ருக்கிறது. புலன்கள், மனம், புத்தி ஆகிய வைதான் அதன் இருப்பிடம் எனப்படுகின்ற ன. இவைகளின் வழியாக அவனை மயக்கி அவனுடைய அறிவை மூடி மறைக்கின்றது . எனவே பரதரில் சிற ந்தவனே! நீ முதலில் உன்னுடைய புலன்களை கட்டுப்படுத்தி சாஸ்திர அறிவையும், அநுபவ அறிவையும் அழிக்கிற பாவத்தின் உருவமான இக்காம த்தை அறவே ஒழித்திடு. புலன்கள் உடலைவிட மேலானவை. அவ ற்றைவிட மேலானது மனம். மனதைவிட புத்தி மேலானது. புத்தி யைவிட மேலானது ஆத்மா. உயிர்தோ ழா! நீ இவ்வாறாக புத்தியைவிட மேலா ன ஆத்மாவை உணர்ந்து, புத்தியினால் மனதை நன்றாகக் கட்டுப்படுத்தி வெல் வதற்குக் கடினமான காமம் என்ற எதிரி யைக் கொல்வாயாக என்றார் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.
இங்கே ஒரு ஆழமான மனோவியல் விஷயத்தை மிக எளிதாக ஸ்ரீ க்ருஷ்ணர் தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது. காமம் என்ற ஆசைகளை த் தூண்டும் உச்ச உணர்வு தான் ஒரு வன் பாவ‌ங்கள் செய்யாமல் இருக்க நினைத்தாலும் அவனை செய்யத் தூ ண்டுகிறது. காமத்தின் வடிகால் இல் லாதவர்கள் கோபக்காரர்களாகவும், கொலை புரியும் அளவு குரோதம் கொள்பவர்களாகவும் மாறிவிடுவ தையும் கூட பார்க்க முடிகிறது.
காமத்தின் அதீத உந்துதலை கையா ளத்தெரியாமல் சைக்கோக்களானவர்கள் பற்றிய நீண்ட குற்றவிய ல் வரலாறுகளும் உண்டு. அமெரிக்காவில் பெஞ்சமின்மில்லர் என்பவர் கறுப்புப்பெண்களாகத் தேர்தெடுத்து கொலை செய்வானா ம். அவனுக்கு ‘ப்ரா’ கொலைகாரன் என்று பெயர் உண்டு! பெண் களின் கழுத்தை பெஞ்சமின் மில்லர் நெரித்துக் கொல்வது, அந்தப் பெண்களின் ‘ப்ரா’ வை உபயோகித்துத்தான். அரைடஜன் கொலை களுக்குப்பிறகும் யாருமேஅவனை சந்தேகிக்கவில்லை. காரணம் கனெக்டிகெட் என்ற ஊரில் இருந்த சர்ச்சில் அவன் பாதிரியார். பாவ‌ த்திற்குத் தூண்டுதல் காமம்.
பெஞ்சமின் மில்லர் இங்கே .
காமத்தின் மீதான அதீத கற்பனையும், மனதில் கட்டுப்பாடற்ற ஆசை களையும் கொண்டு அவற்றை கையாள முடியாத சிக்காட்டிலோ என்ற ரஷ்ய நாட்டுக்காரன் ஒரு சைக்கோகில்லராக பத்து வருடங் களுக்குமேல் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கொலை புரிந்திருக் கிறான். இவன் மாட்டிக்கொண்டது கூட ஒரு சுவாரசியமான விஷ யம். சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய ஒரு ஆய்வறிக்கயை மனோவி யல் மருத்துவர் மூலமாக தயாரித்தனர் காவலர்கள். அதில் கொ லைகாரனைப் பற்றி தங்கள் யூகங்களை எழுதியிருந்தனர். அதாவ து கொலைகாரன் ஒரு நாற்பது வயது ஆள். அவன் குழந்தைப் பரு வம் கொடூரமாக இருந்திருக்கும். அன்புடன் பழக ஆளில்லாதவனா கவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாகவும் இருப்பான். இரு பாலருடனும் பாலுறவு வைத்துக்கொள்ளும் அதீத ஆசை கொண் டவனாக இருப்பான். மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பான். அவன் ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் வாய்ப்புண்டு” என்று எழுதியிருந் தார்கள்.
ஒரு நாள் சிக்காட்டிலோ ஒரு சிறுவனிடம் தனிமையில் பேசிக் கொ ண்டிருந்ததைப் பார்த்த காவலர்கள் வெறுமனே விசாரிக்க வேண் டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். சில விசாரனைக்குப் பிறகு தாங்கள் எழுதி வைத்திருந்ததை அவனிடம் படித்துக் காண்பித்தன ர். சும்மா இருக்காமல் “அட என்னைப்பற்றி அப்படியே எழுதியிருக் கிறார்களே” என்று உளறி விட்டான். பத்து வருடங்களுக்கு மேலாக டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த கொலைகாரன் பிடிபட்டான். ஆம் அவன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். கொலைக்குக் காரணம் காமம்.

சிக்காட்டிலோ இங்கே .
ஒரு சில பெண்களை அவர்களின் கணவன்மார்கள் ‘சரியாக’ கண்டு கொள்ளவில்லையெனில் அவர்கள் வீட்டில் யார் மீதாவது அடிக் கடி எரிந்து விழுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். காமத்தை கையாள முடியாததால் வரும் வினை. யானைக்கும் மதம் பிடிக் கிறது. காமத்தை காலத்தே கொள்ளாமையால்.
ஆனால் எத்தனைமுறை காமம் கொண்டாலும் அதன் மீதான ஆசை சாகும் வரை தீர்வதில்லை. அதனாலேயே ஒரு நிலையில் அந்த உணர்வை கையாள கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த உணர்வுகளை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்தால் பாவ‌ம் செய்யும் தூண்டுதல்கள் குறைவுபடும் என்பதை தெளிவுபடுத்துகி றார்.

அதனாலேயே ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார் ‘பாவ‌ம் செய்யத் தூண்டுவ து ரஜோ குணத்திலிருந்து தோன்றிய காமம்தான். இதுவே குரோத மாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடை வதில்லை. பெரிய பாவ‌ங்களுக்கு இதுவே காரணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந்து கொள்” என்கிறா ர் ஸ்ரீ க்ருஷ்ணர்.
“இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”
நன்றி – பகுத்தறிவு (ஹேராம்)

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (28-Jun-16, 4:27 am)
பார்வை : 201

மேலே