சொல்வதாயின் சொல்லிவிடு

நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்
நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்

நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்
நீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்

நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்
நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்

நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்
நீ தூங்கி எழுவது இதய அறையில்

நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..?
நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..?

செலவதாயின்சொல்லி விட்டு செய் ...!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Jun-16, 8:10 am)
பார்வை : 81

மேலே