போலி மனிதம்

தகுந்த இருக்கை வசதி
இல்லையென
அறிக்கை மேல் அறிக்கை விடும்
அரசியல் கூட்டம் ஒருபுறம்
பாதுகாப்பில் தன்னிறைவு
வெற்று முழக்கமிடும்
நாடக முதல்வர் கூட்டம் ஒருபுறம்
வெள்ளநீரில் வெளிப்பட்டது
மனிதம் என்று
சொல்லி சொல்லியே
ஓய்ந்து போன
ஊடக கூட்டம் ஒருபுறம்
குறை கூறியே
பழக்கப்பட்ட
மானிட வர்க்கம் மறுபுறம்
கை கட்டி வேடிக்கை
மட்டுமே பார்க்கிறது
தன் பிள்ளை
வெட்டு பட்டு துடிப்பதை ,,,,,
அவள் தன் கடைசி பார்வையில் தான்
தெரிந்திருக்கிறது
சேலை கட்டிய
தமிழனின்
போலி முகம் ,,,,,,,,,,!