வாழ்வதெப்படி

தீர்மானங்களும் தீர்ப்புகளும் திணித்து எண்ணங்களையும் ஏக்கங்களையும்
கருக்கி புதைக்கிறீர்
நூற்றாண்டுகளுக்கு பின்தான் கல்வி வேலை என்ற வெளி
பல கட்டளைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் செவி சாய்த்தே....
பரிசென்ன அளித்தீர்
இன்று மலர்ந்த சுவாதியை கோரமாய் ,
குரூர எண்ணத்திற்கு அனிச்சை மலர் வினுப்ரியாவின் வாழ்வை

மனிதராய் நினைத்துதான் உங்களிடையே உலவுகிறோம்
வக்கிர சாத்தானாய் உருவெடுப்பீரோ
வறண்டு போன நம்பிக்கையில்
வாழ்வதெப்படி

எழுதியவர் : அகராதி (28-Jun-16, 5:44 pm)
Tanglish : vaazhvateppadi
பார்வை : 83

மேலே