தினம் ஒரு தத்துவ பாட்டு - 21 =148

“அன்பர்களே நண்பர்களே அபிலாஷைகளை குறையுங்கள்
அனைத்துமொழி பாஷைகளை அறிந்துத் தெளியுங்கள்”

பாரிலே நற்பேரு பெறவே - பாடுபடு பாரத உறவே
ஊரோடு உலகோடு ஒன்றி - உறவாடு உதவும் கரமே

புகழென்ற மாயையின் போதையில் வெகுவாக முழ்காதே
தானென்ற மமதையை தலையிலேற்றி வேகமாக ஆடாதே

ஒரெழுத்தும் படிக்காத பாமர ஜாதியை எலக்காரம் செய்யாதே
கர்மவீரன் காமராஜின் நீதியை எக்காலமும் குளைக்காதே

உழைக்கின்ற உழைப்புக்கு ஓர்நாளில் பலனிருக்கு
உழைக்காத பிழைப்புக்கு எந்நாளும் வசையிருக்கு

ஊரைச்சுற்றும் பரதேசியின் உபதேசங்கள் உதவாது
பாரைச்சுற்றும் பரிமேலரின் போதனைகள் பொய்க்காது

விடாமுயற்சி உடையோருக்கு விருதுகள் நிச்சயம்
விருந்துக்கு அழைத்துவிட்டு வெறுப்பதென்ன லட்சணம்
படிச்ச படிப்புக்கு வேலைத்தராத பாரத நாடே...!
பாரீன்காரன் பாரத மூளையை விலைக்கு வாங்குறானே

இந்திய மூளைக்கு எந்தநாட்டிலும் எப்போதுமே கிராக்கி – அவன்
சொந்த நாட்டில் அவனது மூளைக்கு மூடுவிழாதான் பாக்கி…!

விவசாயம் பொய்த்துப்போயி நாட்கள் பலவாச்சி
சகாயங்கள் செய்துமென்ன எல்லாம் கண்துடைப்பாச்சி

மேடைபேச்சு கேட்டுக்கேட்டே இந்தியன் ஏமாந்தான்- அடுத்துவரும்
ஆட்சியிலும் இதே நிலைதான் - இது இந்தியனின் சாபம்தான்

நாளைய பாரதம் இளைஞர்கள் கையில் சொன்னால் மட்டும் போதுமா
தடியெடுத்து தள்ளாடும் வயதிலும் ஆட்சிக் கட்டில்மீது மோகமா…?

பிறரை குறைகூறி குறைககூறி பழகிப் போனோமே
நம் குறையை பிறர்கூறினால் மூர்க்கம் ஆனோமே

வாழ்வதற்காக பிறந்துவிட்டால் சாவு நிச்சயம்
பொதுவாழ்வில் நேர்மையென்பது எங்கே சாத்தியம் !

எழுதியவர் : சாய்மாறன் (28-Jun-16, 10:24 pm)
பார்வை : 161

மேலே