தொடர் குற்றம் புரியும் ரவுடிகளுக்கு கடல் சமாதி

ஒரு தடவை சிறைவாசம் அனுபவித்த ரவுடி
திருந்திடும் ஆசையத் தவிர்த்துவிட்டு
தொடர்ந்து குற்றம் புரிபவனை
திருத்துவோம் என்பது திரைக் கனவே!

அத்தகைய தொடர் குற்றம் புரிபவரை
அடைத்து வைக்க ஏற்ற இடமொன்று தேவையென்றால்
அதற்கெற்ற இடந்தானே அந்தமான் சிறை;
அதனை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

தொடர் குற்றங்களில் ஊறிய ரவுடிகளுக்கு
வாழ்நாள் கடுங்காவல் தண்டனை அளித்து
அனுப்பிட வேண்டும் அங்கே இரக்கமின்றி
அச்சத்தால் தினம் நடுங்கும் மக்களைக் காக்க!

அங்கிருந்தும் ரவுடிகள் தப்பாமல் இருக்க
சிறைச் சாலையைச் சுற்றிலும்
நீண்டு உயர்ந்த சுவரெழுப்பி
பாதுகாப்பு அரணை அமைக்கவேண்டும்!

தப்பித்துச் செல்வதைத் தடுக்கவேண்டி
துப்பாக்கி ஏந்திய காவலர் பலரை
நிறுத்தி வைக்க வேண்டும் எந்நேரமும்;
தப்பித்தால் செலவின்றி கடல் சமாதி!

@@@@@@@@@@@@@@@@@@@@
படம்: ‘தி இந்து’ புதன், ஜூன். 29, 2016.

எழுதியவர் : மலர் (29-Jun-16, 8:04 pm)
பார்வை : 54

சிறந்த நகைச்சுவைகள்

மேலே