வேண்டும் விழிப்புணர்வு
அச்சம்
மடம்
நாணம்
பயிர்ப்பு
வேண்டாம்
வீரம்
தன்மானம்
மட்டும் போதும்...!!
குச்சுப் புடி
பரதம்
கதகளி
ஹிப் ஹோப்
சல்சா
கற்றது
போதும் கூடவே
கொஞ்சம்
கராத்தே
குங்பூ
ரைய் வண்டோ
கற்றுக் கொள்ளுங்கள் ..!!
கைப்பைகளில்
கண்ணாடி
சீப்பு அழகு
சாதனப் பொருட்கள்
வைத்தது
போதும்
கூடவே மிளகாய்ப் பொடி
பெப்பர் ஸ்பிரே
பேனாக் கத்தியாவது
வைத்திருங்கள்..!!
உங்கள்
தற்பாதுகாப்பை
நீங்களே
உறுதி செய்யுங்கள்
எவரும் உங்கள் ஆபத்தில்
கை கொடுக்கப்
போவதில்லை..!!!
நீங்கள் துணிந்து
செயற்படாவிடில்
நிர்பயா
சுவாதி
வித்தியா ..என
இன்னும்
நீண்டு கொண்டு
செல்லும் இப்பட்டியல்
முடிவே இன்றி .....

