மறுப்பதேனடி
கெஞ்சாமல் கெஞ்சுகிறேன்-உன்னை
கொஞ்சாமல் கொஞ்சுகிறேன்...
என் நெஞ்சுக் கூட்டுக்குள்
இஞ்சு இடமின்றி ஆக்கிரமித்துக் கொண்டாய்... !
நீயும் நானும்....
நீயும் நானும் என சொல்லும்போதே
இனிக்குதடி ....
என் இதயம் இறுமாப்பில்
துடிக்குதடி...
வீட்டு முற்றத்தில் நிலா சோறு ...
விளையாட்டாய்....
உனக்கு நான் ஒரு பிடி
எனக்கு நீ ஒரு பிடி ...
காலாற சாலையோரம் ....
காலாற சாலையோரம்
மாலை நேர நடை பயணம் ....
ஈரைந்து விரல்கள் ....
நம் ஈரைந்து விரல்கள்
மீட்டிய இசைகள் பல கோடி...
என் மூளை நரம்புகளில்
எதிரொலிக்கும் கானம் கோடி கோடி ...
உன் இதழ்கள் உதிர்த்த
சொற்களில் வீழ்ந்தேனடி
அன்பெனும் மாயக் கயிற்றால்
என்னைக் கட்டிப் போட்டாயடி...!
இருவிழிப் பார்வைக்காக
ஏங்கித் தவித்ததேனடி-உன்
இருவிழிப் பார்வைக்காக
ஏங்கித் தவித்ததேனடி...
மனமிருந்தும் மறுப்பதேனடி...jQuery17107706529984554085_1587573812381?
ஊட்டி வரை செல்ல வேண்டாம்
நாம் இணைவதற்கு ...
வாழ்க்கை இலக்கணம்
நமக்கெதற்கு ...?
உன் நினைவொன்றே போதும் ...
நான் உன்னோடு வாழ்வதற்கு ...!!!
உன் நினைவொன்றே போதும் ...
நான் உன்னோடு வாழ்வதற்கு ...!!!

