காரணம்

காரணம்

என் தக்காளி தோட்டத்திற்கு
ஒருமுறையேனும் வந்து போ!
உன் இதழைப்போல்
அது சிவக்கட்டும்!

தன் வாய் சிவக்க
என் பாட்டி - தினம்
வெற்றிலை போடுவாள்

உன் இதழ் சிவக்க
என்ன காரணமென்று
யார் கேட்டாலும் சொல்லிடாதே!
அப்புறம் நான் மாட்டிக் கொள்வேன்!

எழுதியவர் : கிச்சாபாரதி (29-Jun-16, 10:32 pm)
Tanglish : kaaranam
பார்வை : 70

மேலே