இது என்ன காதலோ
எதிர்பாராமல் ஒருத்தியை
முதன் முதலில் பார்த்தவுடன்
அவனுக்கு அரும்புமா
அவள்மீது காதல்?
அவள் அழகில் அவன் மயங்க
வாய்ப்புண்டு தவறில்லை!
உடனே அவளிடம் அவன்
தன்காதலைச் சொல்லி
ஏற்கும்படி வேண்டுவானாம்!
அவன் என்ன பைத்திய்ம் பிடித்தவனா?
பலநாட்கள் அலைபேசி உரையாடலோ
அல்லது பலநாட்கள் முகநூல் நட்போ
இல்லாமலும்
அவள் புகைப்படத்தையும்
என்றும் பார்க்காமலும்
அவளை ஒரு நாள்
எதிர்பாரா இடத்தில் பார்த்தவுடன்
அவள்மேல் காதல் கொள்வானா?
அவளிடம் அதையும் சொல்லமுடியுமா?
அதையும் அவளிடம் சொல்வானா?
என் தோழி ஒருத்தி
எழுதவுள்ள கதையின் கரு இது.
தொடரவா வேண்டாமா
என்று அவள் கேட்க.
”நீ படைக்கும் காதலனைவிட
நீ தான் பெரிய முட்டாள் என்றேன்.
வேறு நல்ல கரு இருந்தால்
அதை நீ கதையாக்கிக்
காட்டு என்றேன்”.
வாயடைத்து நின்றவளுக்கு
ஏமாற்றம்
ஊக்கம் தரமறுத்த தோழியின்
நட்பையே அறுத்தெறிய
துணிந்தவள் எனைப் பார்த்து
முறைத்தாள் பேச்சே இன்றி.