முத்தம்

இடைவெளி கொடுமை
கொடுமை
உடைகளுக்குள்ளே
உடல் ஆகிடு
உள்ளம் ஆகிடு
இடை நீ ஆகிடு
என் இதயம் ஆகிடு

உயிரே
உணர்வே
எனை ஏதோ செய்கிறது உடல்
கணநேரமும் ஓயாமல்
கட்டுக்குள் கொண்டுவர
கட்டிபிடித்துக்கொள்

என்னங்க இதய துடிப்பு விரைகிறது
நெஞ்சு பயங்கரமாய்
வலிக்கிறது
தலை சுற்றுகிறது
மயக்கமாக வருகிறது
பார்வைக்கு யாவும் மங்கலாய் தெரிகிறது
கதவை சாத்திவிடு
உடைகள் எக்குத்தப்பாய் கிடக்கும்
உடலில் உயிர் இல்லாதது போல் உணர்கிறேன்
எதுவும் தெரியவில்லை
என்ன நடக்கிறது புரியவில்லை

என்னங்க என்றே
தரையில் மயங்கி விழுகின்றாள்
தண்ணீர் தெளித்து
எழுப்ப
மூச்சு விட முடியாது
கஷ்டப்படுகிறாள்
சத்தம் கேட்டு யாரோ கதவை தட்டுகிறார்கள்
(கையை பிடித்துகொண்டிருக்கிறேன் .நான் எழுந்திருக்க முற்பட கையை பிடித்து இழுக்கிறாள்.போகாதே என்பது போல்)

நான் திறந்துவிட்டு வருகிறேனடி
என்னங்க என்ன விட்டு போகாதீங்க
அதுக்குள்ள என் உயிர் போய்டுமோனு தோனுது
நான் உங்க மடியில சாகணுங்க

உனக்கு ஒன்னும் ஆகாது

கதவை திறந்ததும் அறைக்குள் வந்தார்கள்
என்னவரும் என் மகனும்(என்னவரின் தம்பி)

என்ன அண்ணா
அறைக்குள்ள இருந்து சத்தம்

உன் அண்ணி
மயக்கம் போட்டு விழுந்துட்டா

என்னாச்சு அண்ணிக்கு
ஏன் இப்படி தரையில கெடக்கறாங்க.
உடனே வைத்தியர கூப்பிட வேண்டியது தானே.

அவளால ரொம்ப முடியல. மூச்சு வாங்குதுனு சொல்றா.
என்ன விட்டு எங்கயும் நகராதீங்க.
நீங்க போய்ட்டு வைத்தியர கூப்டு வர்றது பிரயோஜனப்படாது.
உயிர் போய்ட்ருக்குனு சொல்றா.
எனக்கு கையும் ஓடல
காலும் ஓடல
என்ன பண்றதுனு தெரியல.
அவளுக்கு ஒன்னுன்னா
என்னால உயிரோட இருக்க முடியாது தம்பி

அப்படியா அண்ணா.

என்னாச்சுங்க அண்ணி.
வாங்க.எழுந்திருங்க.
முடியலப்பா
என்னன்னு தெரியல
தூங்கிட்டே இருக்கும் போது யாரோ
முகத்ல தலையணைய போட்டு அழுத்தி
என்ன சாகடிக்க முயற்சி செஞ்சாங்க
நான் மயங்கிட்டன்.
செத்து போய்டனு நெனச்சி போய்ட்ருக்காங்க

எனக்கு ரொம்ப பயமாருக்குப்பா
நானா இருக்கவே சரி
இதுவே இவருக்கு நடந்திருந்தா
ஐயோ நெனச்சி பாக்கவே முடியல
நீதான் அவர பத்திரமா பாத்துக்கணும்

திருடன் கையிலயே சாவியா?
அண்ணி இந்த தலையணையா பாருங்க

தம்பி நீயாடா
இதலாம் பண்ண
ஆமாம் அடியேன் நானே

டேய் உன்ன சொந்த புள்ள மாதிரி நெனச்சாளேடா
அவள கொல்ல உனக்கு எப்படி மனசு வந்துது

என்ன பண்றது
நான் நாடு ஆளணுமே
உன்ன கொன்னுட்டா
பதவிக்கு ஆச பட்டு பண்ணிட்டேனு
உலகம் சொல்லும்
இதுவே அண்ணினா
திருடன் யாரோ அரசிய கொன்னுட்டான் அப்படினு சொல்லும்
அண்ணி போன வருத்தத்ல
நீங்களும் பைத்தியமாகிடுவீங்க.
எனக்கும் வேலை முடிஞ்சுது

உன்ன நான் கொல்லாம
விடமாட்டன்டா

என்னங்க
மகன கொல்லாதீங்க
இது என் மேல சத்தியம்

மகனே
அம்மாவுக்கு
ரொம்ப வலிக்குதுப்பா

வலி தாங்க முடியலப்பா
அம்மாவுக்கு மோட்சம் தாப்பா
உனக்கு இந்த மார்புல பால் தரலனாலும்
நீயும் என் மகன் தான்
இந்தா வாள பிடி
என்ன மார்புலே குத்தி கொல்லு


என்னால நீ முடி சூட்டிக்கப் போறத பாக்கமுடியாது
நீ முன்னாடியே சொல்லியிருந்தா
அவரே விட்டுக்
கொடுத்திருப்பாரே
அவர ஒன்னும் பண்ணிடாதப்பா.
மக்களுக்கு நல்ல ஆட்சிய தா

சரிங்க அண்ணி
அண்ணி இல்ல அம்மா
சரிங்கம்மா

கொஞ்சம் நேரம் வெளிய
இருப்பா
நான் அவர் கூட தனியா இருக்கணும்

என்னங்க
மடிய காமிங்க
என் மார்பிலிருந்து
வாளை பிடுங்கி
அவர் நெஞ்சில்
குத்த முயல்கையில்
நான் தடுத்து
வேண்டாங்க
வலிக்குங்க

என்ன தனியா விட்டு போகலாம்னு பாக்கறீயா டி
நெஞ்சு வலிக்குதுடி
எப்படியா இருந்தாலும்
இறந்துடுவன்டி
அதான் உங்கூடவே
சாகலாம்னு வாள எடுத்தன்

என்னால
நீங்க
குத்திக்கறத பாக்கமுடியாது

என்ன இந்த நரகத்லயே
ஷாஜஹான் மாதிரி
ஔரங்கசீப் கிட்ட சித்திரவதை அனுபவிக்க விட்டுப்போறீயா

அப்படி இல்லைங்க

என்னால
உங்க சாவ
பாக்க முடியாது
நான் இறந்ததுக்கப்றம்
வலி இல்லாம தூக்க மாத்திரைய சாப்டுட்டு
என்ன கட்டிபிடிச்சிட்டே தூங்கிடுங்க

என்னால முடியாதுடி
நானும் உங்கூடவே தான் வருவன்

சொன்னா கேக்கமாட்டீங்க

சரி நான் காத்துக்கிட்ருக்கன்
தூக்க மாத்திரைய எடுங்க
நீ பொய் சொல்ற
உன் கண்ணு எப்பயோ
சொருகிடுச்சி
அதுவரைக்கும் உன்னால தாங்க முடியாது

இப்பவே இங்கயே
அந்த வாள குடு
குத்திக்கிட்டு
உன் மடி சாஞ்சிடறன்

உங்க முடிவ மாத்த முடியாது

சரி முதல்ல என்ன
நல்லா கட்டிபிடிங்க
ம்ம்ம்
இந்தாங்க
இப்ப
குத்துங்க

என்னடி
இது
உன்ன நான்
எப்படிடி குத்துவன்
எனக்கு தெரியாது
இதான் ஒரே வழி
சரிடி
என்ன நல்லா பிடிச்சிக்கோ
என்ன மன்னிச்சிடுடி
என்னங்க
வலி தாங்கமுடியலையா
ஐயோ நான்
எவ்ளோ சொன்னன்னே
எவ்ளோ ரத்தம்
ஐயோ என்னங்க
எவ்ளோ ரத்தம்
அடியே
அது எல்லாம் உன் இரத்தம்டி
சும்மா இருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது
இருங்க
நான் உங்களுக்கு வலிக்காம இருக்க மருந்து தாரன்.
நான் தான் உங்க மருந்து
என்னை இறுக்க கட்டி
அணைத்து முத்தங்கள்
( உம்மா உம்மா
உம்மா உம்மா
உம்மா )
இட்டுகொண்டிருக்க
உயிர் பிரிந்தது
உடல்களை விட்டு

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jul-16, 2:01 pm)
Tanglish : mutham
பார்வை : 392

மேலே