மெழுகு

உருகிய மெழுகை
பருகிய ஒளி!
குறுகிய அழுகை
கருகிய துளி!
மருவிய தொழுகை!
செருகிய வளி!
மன்றாடும் காதல்
மறுக்கின்ற போது
மலடாய் அவன் மனம்
பிறக்கின்றபோது
சிரிப்பெனும் பசை
சிறிதாக அங்கே
சிதறிப்போனாலும்
பதறிப்போன
இல்லமும்
உடைந்துபோன
உள்ளமும்
ஒட்டிவிடுகிறது! - அவள்
சுண்டுவிரலில்
சோறுஎடுத்து
சுத்தியலில்
பேறுடைத்தாள்
கிளிஞ்சலில்
தேனெடுத்த்து
கிளியமுதில்
சாறெடுத்தாள்!
சிந்தை மனம்கொள்ளா
சிநேகிதத்தை
சந்தை மனமில்லா
சரித்திரம் படைப்பாளோ?

எழுதியவர் : கவிஞர் க . முருகேசன் (5-Jul-16, 2:43 pm)
பார்வை : 113

மேலே