என்ன ராசி

உனக்கு
என்ன ராசி என்று கேட்டேன்
மலர் ராசி
என்றாள்
உனக்கு
என்ன ராசி என்றாள்
மன ராசி என்றேன்
மலர் ராசியுடன் மன ராசி சேர்ந்தால்
என்ன ராசி என்று கேட்டேன்
மௌனமானாள்
ஏதும் சொல்ல வில்லை !

மௌன ராசியா ?
இல்லை
கட்டங்களுக்கு அப்பால்
காதல் ராசி !
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (5-Jul-16, 3:11 pm)
Tanglish : yenna raasi
பார்வை : 104

மேலே