எழுத்து
எழுத்தின் வீர்யத்தைக்
காயடித்து விட்டீர்கள்.
நாணலாய் வளைவதாய்
தரையில் விழுந்து
பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
காலம் என்னும் கரையான்
கவனித்துக்கொண்டே இருக்கிறது ;
அரித்துத் தின்றுவிட.
விழுந்தவை எல்லாம்
வித்துக்கள் அல்ல ;
முளைத்து விட.