களிபேருவகை

வாழ்வின் திசைகளில் வந்த
வாள்களை பத்திரபடுத்தினேன்.

கோர மனங்களின்
புன்னகையைப்
புறந்தள்ளினேன்.

மௌனம் கலைக்க
உசுப்பேற்றிய வார்த்தைகளை
வீரியங் குறைத்தேன்.

காலம் வேடிக்கை பார்த்தது.
தொலைத்து விடுவேன்
தொலைத்து – என்று
மிரட்டியது.

தாமே தொலைபவை
குறித்து
களிபேருவகை தான்
காலத்திற்கு.

காலம் என்னை
மாங்கொட்டையாய்
சப்பித்துப்பியது ;
மரமாய் வான்முட்ட
முளைத்துக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : கனவுதாசன் (5-Jul-16, 6:52 pm)
பார்வை : 141

மேலே