பொறுக்கிகள்

அந்த மரம்
அப்படியேதான் நிற்கிறது.
நானறிந்த நாளில் இருந்து.

என் தந்தையைக் கேட்டேன்
அவரும் அதையேதான் சொன்னார்.

தாத்தாவைக் கேட்டீர்களா? என்றேன்
அவரும் அப்படியேதான் சொன்னாராம்.

இலைஉதிர் காலங்களில்
யாரும் அங்கும் பெருக்குவதில்லை.
காற்றுத்தான் பெருக்கித்தள்ளி
எங்கெங்கேயோ சேர்த்து விடுகிறது.

புளியம்பழம் பழுக்கும் காலங்களில்
யார் பறித்துச் செல்கிறார்கள்?
ஒருபோதும் பார்த்ததில்லை.

தந்தையும் அப்படியே தான் சொன்னார்.
தாத்தா சொன்னதும் இது தானாம்.

உதிரும் பழங்களை
சின்னஞ்சிறுசுகள்
பொறுக்குவதைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால்,
அவர்கள் பொறுக்கிகள் அல்லர்.

எழுதியவர் : கனவுதாசன் (5-Jul-16, 6:49 pm)
Tanglish : porukkigal
பார்வை : 75

மேலே