குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி

குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சிக்கு அக்
குடைக்குள் நாம் இருப்பினும் !

அது குடையல்ல கடவுளின் கொடை என்றெண்ணி நன்றி சொல்வோம் !

குளிர்சாதன பெட்டிக்குள்ளே
அடைபட்டு கிடந்தோமே !

அடிக்கடி வைத்தியருக்கு
கொட்டிக்கோட்டி தந்தோமே !

இயற்கைக்கு ஈடாகிடுமோ வரும் குடைக்குள்ளே குளிர்க் காற்று !

வீசுகின்றதே நம்மோடு இதமாக பேசுகின்றதே மகிழ்ச்சி பொங்க !

ஏசிடுவார் பெற்றோரும்
எழுந்து நட வீடு செல்வோம் !

குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி தடைபட்டு போகும் முன்னே !
(By :dn. First Published: 04.July.2016
06:55 PM IST)

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Jul-16, 9:44 pm)
பார்வை : 129

மேலே