அலைகளின் கோபம்

இயற்கையை அழித்து தானே
எழிலான ஊர்கள் அமைத்தே
செயற்கையாய் வாழ்ந்து பழகி
இயற்கையின் செல்ல பிள்ளை
நிழல்தரும் தருக்கள் தன்னை
வேரோடு சாய்த்து விட்டோம்
தழல்தான் சுடுதே என்றே
தவித்தேதான் வாடு கின்றோம்

பசுமைக் கொஞ்சிடும் சோலைகளும்
பசுவோடு சேர்-கன்றும் ஆடுகளும்
இசைப் பாடிடும் புள்ளினமும்
ஏழிலான கிளிகளது பேச்சழகம்
திசைமாறி போனதுவே, இதுவன்றி
விசையாய் துள்ளும் நதிகளுமே
வீணாகத்தான் போக விட்டோம்

மனிதன் கொண்ட தாகத்தால்
மண்ணின் வளங்க ளெலாம்
இன்மை யாகி போனதுவே
இதுதான் நாகரீக மென்றே
விண்ணின் வழியும் மாசாக்கி
விளைச்சலை அழித்திட் டோம்
கண்ணை அகல திறந்துதானே
கடலன்னை சீறீப்பாய, அதுதான்
அலைகளின் கோப மென்போம் !

---கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (6-Jul-16, 9:17 pm)
Tanglish : alaikalin kopam
பார்வை : 176

மேலே