வழியும் கண்ணீரைத் துடைக்கவோ
வழியும் கண்ணீரைத்
துடைக்கவோ
வானில் வளர்ந்த
நிலவு
உன்னிலும் என்னிலும்
உறவு கொண்டு
மலர்ந்து வளர்ந்து
நெஞ்சில் தோய்ந்து
நெஞ்சில் தேய்ந்த....
நினைவை நிலவை நினைத்து
வழியும் கண்ணீரைத்
துடைக்கவோ ?
~~~கல்பனா பாரதி~~~