என் ஆத்தி சூடியின் பிறப்பிடம் நீயே
அமுதே,
நீ சிந்தி போன புன்னகை...
ஆசையே,
நீ வீசி போகும் பார்வை...
இனிதே,
நீ பேசி போகும் நொடிகள் ....
ஈகையே,
நீ காதல் மொழிந்த பொழுதுகள்...
உணர்வே,
நீ என்னுள் எழும் உண்மைகள்...
ஊடலே,
நீ எனக்கு தந்த வரங்கள் ...
என்னுயிரே,
நீ என்னில் கலந்திருக்கும் என் நாடி துடிப்பே...
ஏங்கிய கனவே...
நீ வேண்டும் என்று என் இதயம் கேட்ட அசிரிரியே...
ஐ
நீ என் உலகின் அழகியே...
ஒரு தேவதை,
நீ என் மன வானில் உலவும் தேவதை
...
ஒசை,
நீ என் ஆசைகளின் ஒசை...
ஔவை,
நீ என் அறிவின் ஔவை...
என் ஆத்திசுடியின் பிறப்பிடம் நீயே..