ரத்ததானம்

குருதியே
கருவுக்கு விதை நீ
பாலின் உருவுக்கு சதை நீ
தனக்குத்தானே
அணை போடும் அற்புதமே
அணை மீறி சென்றுவிடும் அபாயமே

குருதியே
நீ என்ன அரசியல்வாதியா
உனக்கு யார்
அழுத்தம் கொடுப்பது ?

என் கோபத்திற்கு நீ ஏன்
கொதிக்கிறாய் ?

நீ ஆங்கில தந்தைக்கும்
கணித மாதாவிற்கும்
பிறந்த குழந்தையோ
A+ve , B-ve எனப் பெயர் கொள்ள ?

தானமிட்ட குருதியை மீட்டெடுக்க
இரு நாளே உனக்கு உச்சமே
அதனால் இளைஞர்களே
தனமிட தேவையில்லை அச்சமே

ரத்ததானம் செய்வீர்

எழுதியவர் : குமார் (11-Jul-16, 6:59 pm)
பார்வை : 95

மேலே