தகப்பனான சொப்பனம் - சந்தோஷ்

என் குட்டிப் பாப்பா....
வண்ண வண்ண ஆடை கேட்டாள்.
நான்.. உலகத்தின் மொத்த வண்ணங்களை
வரவழைத்து ஆடை நெய்கிறேன்.

என் செல்லமகள்
உறங்கும் போது
’கதை சொல் அப்பா’ என்கிறாள்
உலகத்தின் அதி அற்புதமான
கதைச் சொல்லி நானென கர்வமாகிறேன்.

என் பொன் மகள்
தன் பிஞ்சு கால்களுக்கு
தங்க கொலுசு கேட்கிறாள்.
நான் உலகத்தின் மொத்த
தங்கங்களையும் உருக்க ஆரம்பிக்கிறேன்.

எனது ஒரே ராஜகுமாரியான
என் கனவு மகள்
எதைக் கேட்டாலும்
இல்லாத எது ஒன்றைக் கேட்டாலும்
அவளுக்காக.. அவள் சந்தோஷத்திற்காக
இந்த உலகை கூட விலை பேசுகிறேன்..!
புது உலகை ஒன்றுகூட உருவாக்குவேன்...!

என்பதாக.....
பூரித்திருந்தப்போது
தீடிரென..விழிப்பு வந்தது
அதிகாலை மணி நான்கில்...!

அடடா. கனவா.. இது..?
அடடே... எனக்கும் கூட
கனவுகள் வருகிறதே..!

ஹம்ம்ம் எனக்கும் கூட
கனவுகள் இருக்கிறது...!

**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (12-Jul-16, 8:39 am)
பார்வை : 89

மேலே