முதன் முதலில்

முதன் முதலில் பார்த்த பாவையும்
முதன் முதலில் பூத்தப் பூவையும்
முதன் முதலில் உரையாடிய பேதையும்
முதன் முதலில் என்னைக் கவர்ந்த பெண்மையும்
முதன் முதலில் என்னை விரும்பிய தேவதையும்
முதன் முதலில் ஆசை வார்த்தைப் பேசிய குமரியும்
முதன் முதலில் கவிஞனாக்கிய கன்னியும்
முதன் முதலில் வளைந்து நின்ற வானவில்லும்
முதன் முதலில் காதல் விதை விதைத்த பெளர்ணமியும்
முதன் முதலில் காதல் கதை சொன்ன கோமதியும்
முதன் முதலில் நாணம் கொண்ட வான்மதியும்
முதன் முதலில் நெஞ்சை குளிர வைத்த பனித்துளியும்
முதன் முதலில் உஷ்ணம் தந்த ஒளி விளக்கும்
முதன் முதலில் முத்தம் தந்த காதலியும்
முதன் முதலில் முதலிரவுக்கு வந்த தேன் நிலவும்
ஒருத்தியே என்றால்...என் வாழ்வில் என்ன குறை?!
ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால்
எதற்கு ஏற்படுது வன்முறை!
என்னவளை மறப்பேனா உயிர் உள்ளவரை!
அவள் கேட்டாள் விட்டுக் கொடுப்பேனே என் உயிரையும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Jul-16, 10:52 pm)
Tanglish : muthan mudhalil
பார்வை : 80

மேலே