தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை 67 = 161

“காதல் இளம்பூவே - காணவேண்டும் உன்னை
காதகன் நானில்லை - காத்தருள்வாய் என்னை…
அன்பு நித்திலமே வேண்டாம் மெத்தனமே
இன்ப பொற்குளத்தில் இருவரும் நீந்தனமே…!”

இளமை காலம் இதுவாகும்
இனிய சுகங்களின் வரவாகும்
எனதன்பே எழுது காதல் ஓலை
தொடங்கட்டும் நமது இன்ப லீலை
மன்மத பானம் விடுவது சுலபம்
மனமிறங்கி நீயிங்கு வரனும்..!

முருங்கை பூவூக்கு மோக சக்து அதிகம் – அது
படுக்கை சுகத்துக்கு பெரிதும் உதவும்
கீரை வகைகள் ஆரோக்கிய மருந்து – அது
சித்த மருத்துவத்தின் தனிப்பெரும் விருந்து

“காதல் இளம்பூவே - காணவேண்டும் உன்னை
காதகன் நானில்லை - காத்தருள்வாய் என்னை…
அன்பு நித்திலமே வேண்டாம் மெத்தனமே
இன்ப பொற்குளத்தில் இருவரும் நீந்தனமே…!”

வம்பிழுக்கும் போதெல்லாம் கம்பெறிந்தவளே..
காந்தவிழி பார்வையிலே என்னை கவர்ந்தவளே
காதல் பிச்சைப்போடு கனிவாக ஏற்கிறேன்
ஊடல் இச்சை தொடங்க காத்திருக்கிறேன்

காதலென்னும் கட்டெறும்பு கடிக்க கடிக்க சுகமிருக்கு
கட்டாயம் காதலுக்கு எப்போதுமே மொளசிருக்கு
இன்பமென்னும் கட்டிலிலே இட்டு அலங்கரித்தால்
முத்தான முத்தொன்று பத்துமாதத்தில் பரிணமிக்கும்

“காதல் இளம்பூவே - காணவேண்டும் உன்னை
காதகன் நானில்லை - காத்தருள்வாய் என்னை…
அன்பு நித்திலமே வேண்டாம் மெத்தனமே
இன்ப பொற்குளத்தில் இருவரும் நீந்தனமே…!”

எழுதியவர் : சாய்மாறன் (11-Jul-16, 10:43 pm)
பார்வை : 52

மேலே