உன் கண்

ஓ! வெண்ணிலவே!
உன் மெளனம்தான் தினம்
என்னைக் கொல்லுதே!
எனினும் உன் கண்கள்தான்
எனை வாழச் செய்யுதே!

காதலன் கண் முன்னே
ஊமையாய் நடிப்பதேன்?
எனக்காய் சிவந்திருக்கும்
உனது செவ்விதழைத் திறந்து
செந்தமிழன் என்னிடம்
செம்மொழியில் பேச மறுப்பதேன்?

கூசாமல் கூவடி என்னிளம் கருங்குயிலே
உன்னெழில் குரல் கொண்டு
முத்தமிழ் பெறுமையை எடுத்துக் கூவாயோ
நீ சொன்னால் கேட்கும் இந்த உலகம்
நாளைக்கு நம்மை திரும்பிப் பார்க்கும்
இந்த உண்மை நீ உணர்வது எப்போது?
என் ஆசையையும் அறிந்து கொள்
பெண்ணே நீ இப்போது!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Jul-16, 10:22 pm)
Tanglish : un kan
பார்வை : 202

மேலே