என் சுவாசக் காற்று

காற்றே!
உருவமில்லா உன்னை
இந்த உலகமே சுவாசிக்கிறது
என்பதனை அறிந்த நீ

உன்னால்தான் என்னிதயம்
செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது
என்று நான் சொன்னால்
அதை மட்டும் ஒப்புக் கொள்ள மறுப்பதேன்?
தென்றலே நீயும் பெண்ணினமோ?

என்னுடலை இயக்கும்
என் சுவாசக் காற்றே!
என்னை விட்டு நீ பிரிந்தால்...
அடுத்தக் கணமே
என்னுடல் நாறும் பிணம்
என்பதை நான் மறவேன்!

என்னதான் என்னை நீ திட்டினாலும்
என் இதயம் உன்னைத்தானே தேடுது!

ஓ! மழையே!
இன்றில்லை எனினும்
என்றாவது ஒரு நாள்
நீ விழமலா இருக்கப் போகிறாய்...
என் மீது - செம்மண் மீது!

அப்போதும்...
நான் புதைந்து கிடக்கும்
புதைக்குழிக்குள் வந்து நீ நிறைவாய்...
என்பதை மறந்துவிடாதே!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Jul-16, 10:06 pm)
Tanglish : en suvasak kaatru
பார்வை : 92

மேலே