காக்கை நிறப் பெண்

காக்கை நிறப் பெண்ணே!
உன் வண்ணம்தான் கவர்ந்தது என்னை
கறுமை தீட்டியக் கண்ணே
உன் கூர்பார்வைதான்
காந்தமாய் ஈர்க்குது இந்த இளைஞனே!

தினம் தலை சாய்த்து
மண்ணை நோக்கியே வலம் வரும்
என் கருப்பு நிலவே!
உன் கார்மேகக் கூந்தலுக்கு
நான் தேய்த்து விடவா
தேங்காய் எண்ணெய்!

ஆண் மகனைக் கண்டாலே
நாணும் தமிழ் பெண்ணே
உன் எழிலைக் கண்டு
கவிபாடாதவன் ஒருவன் இருந்தால் சொல்!

கண்ணே ! என் காதலியே
வானம்பாடி போல் - தினம் கவிபாடி
என்னை மயக்கும் கருங்குயிலே
என்னைக் கண்டவுடன் ஊமையாவது ஏன்?

உன்னிதழ் திறந்து
ஓர் இனிய சொல்லினை
நீ கூவுவது எப்போது?
மறந்து போன என் செந்தேன் மொழியை
தூசுதட்டி எடுத்து படிப்பேன் அப்போது!
ஏனெனில் உன்னை வர்ணனை செய்ய
மற்ற மொழிகளெல்லாம் உதவாது!
ஆதலால்... துளி தேன் சொல்லை
இன்றே நீ சிந்திடு! என்னை கவிஞனாய் மாற்றிடு!

எழுதியவர் : கிச்சாபாரதி (11-Jul-16, 9:24 pm)
பார்வை : 80

மேலே