அவன் வருகை

..............அவன் வருகை ..............

நீ பிறந்த இடம்விட்டு
நான் வளந்த இடத்துக்கு
வந்தவனே ....

வீட்டுக்குள்ள
என் மூச்சி காத்து
உன் தேகம் தீண்டி
போகலையா ...

பெத்தவன
காணலன்னு
உன் கண்ணு ரெண்டும்
தேடலயா...

ஒளிஞ்சி நின்னு
பாக்குறேனு
நீ புன்சிரிப்பு
பூக்களயா ....

மன்னவனே
நீ சாயணும்னு
என் மடி தேடி
ஓடலயா ....

புது சுகம்
உள்ளுக்குள்ள
புகுந்து ஓடி
ஆடலயா...

தரை மேல
படுக்கையில
பல தலைமுறை
தெரியலையா ....

எழுதியவர் : தீ .ஜெ.அகாஷ்வருண் (11-Jul-16, 8:52 pm)
Tanglish : avan varukai
பார்வை : 76

மேலே