இனிய கைபேசி
அன்பே என்
அன்பே...
நீயே என்
துணை
இருளில் நான்
நடக்க ஒளியாகிறாய்
நானறியா விடயங்களை
சொல்லித்தருகிறாய்
அன்பே என்
அன்ப...
உனை காணாது
போனால் பதறுகிறேன்
உன் அழைப்பொலிக்கு
ஓடோடி வருகிறேன்
அன்பே என்
அன்பே
தனிமையில் சிரிக்க
வைத்து பைத்தியம்
என்று பெயர்
வாங்கித்தருகிறாய்
அன்பே என்
அன்பே...
பிரிந்த உறவுகளை
சேர்த்தித்தருகிறாய்
உறவுகளை இணைக்கும்
பாலமாகிறாய்
அன்பே என்
அன்பே
பயன்கள் பல
நீ கொடுத்தாலும்
குறைகளும் உண்டு
மறுப்பதட்கில்லை
அன்பே என்
அன்பே
என் இனிய
கைபேசியை
நீயும் ஒருவகையில்
இந்த பூமி
மாதா போன்றவள்
தான்
அன்பே என்
அன்பே...
உன்னில் நந்தவனமும்
உண்டு...!
கொடிய பாதாளமும்
உண்டு....!