தினம் ஒரு பாட்டு = இயற்கை -22 = 162

பீச் பீச் மெரீனா பீச் பீச்
பீச் முழுதும் காச் மூச்
வேர்ல்டு நெம்பர் டூ பீச்
டூயட்டரின் பெஸ்ட் சாய்ஸ் !

என்ட்ரன்ஸ் ப்ரீ பாஸ்
என்ட்றி டெவன்டிஃபோர் அவர்ஸ்
சில்ட்ரன்ஸ் ஹார்ஸ் ரெய்டு
மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ்

ஈவீனிங் ஃபோரோ கிளாக்
கிரவுடோ ஸ்கை ஸ்டார்ஸ்
மார்னிங் சிக்சோ கிளாக்
வாக்கிங் வெயிட் லெஸ்

சுடச்சுட ப்ரை பிஷ்,
சுவையோ சூப்பர் டேஸ்டு
மொறுமொறு சில்லி பஜ்
மனசுல ரொம்ப டச்

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
வாங்கலனா பண்ணுவான் கிண்டல்
கடலைப்போடும் காளையருக்கெல்லாம்
கடலைமிட்டாய் சர்க்கரைப்பொங்கல்

ஜாதி மதம் பார்க்காத ஜனசமுத்திரம் - இங்கே
கூடியாடி விளையாடும் ஒரே கோத்திரம்
வேலையென்னும் பளுவிலிருந்து சற்றுவிலகிடும்
மூளைக்கு ஓய்வுகொடுத்து தன்னை மறந்திடும்

அமைதியின் உறைவிடம் இங்கே உறங்குது
அது ஆற்றியத் தொண்டு அளப்பறியது
தலைமையை மறக்காத தம்பியர் படையால்
அண்ணாசதுக்கம் அணையாவிளக்கால் ஜொளிக்குது

மீளாத்துயரில் விட்டுச்சென்ற மக்கள் திலகத்தின் மணிமண்டபம்
நீலக்கடலின் ஓரத்தில் முகாரி ராகம் இசைக்கின்றது !
பாலைவன பரப்புகளில் பரந்து விரிந்த புல்வெளிகளில்
சோலைவன செடிகொடிகள் வள்ளலின் பெருமை சொல்கின்றது !

மெரீனாதானே சென்னையின் - கருணாநிதியின் வசனங்களாய்
கடலோரம் வருவோருக்கு மனபாரம் குறைக்கின்றது
திராவிடத் திருநாட்டின் திருமங்கை திட்டங்கள்போல்
மெரீனாவின் கரையோரம் மக்கள்மனம் குளிர்கின்றது !

எழுதியவர் : சாய்மாறன் (14-Jul-16, 7:20 am)
பார்வை : 113

மேலே