என் வாழ்க்கை வளர தேய்ந்த வெண்ணிலா அவள்

அம்மா என்று நான் அழைக்க
மறு பிறவி பார்த்தவள் அவள் ....

தத்தி தத்தி நடை பழக
பதட்டதுடன் பார்த்தவள் அவள் ...

குட்டி சிரிப்பு சிரிக்க
கோமாளியாய் ஆனவள் அவள் ..

அழுது அழுது தேம்ப
பதறி வந்து பார்ப்பவள் அவள் ....

உணவு உண்ண வைக்க
இரண்டு தெரு நடந்தவள் அவள் ...

பள்ளி கூடம் நான் பிரிந்து போக
கண் கலங்கி நின்றவள் அவள் ...

கல்லூரி படிப்பு நான் முடிக்க
கண்கள் கலங்கி நின்றவள் அவள் ..

வேலை சென்று நான் வர
தெருவில் எதிர்பார்த்திருப்பாள் அவள் ....

திருமணம் தான் நடத்தி
மண மகிழ்ந்து வாழ்த்தியவள் அவள் ....

என் வாழ்க்கை வளர தேய்ந்த வெண்ணிலா அவள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (14-Jul-16, 8:10 pm)
பார்வை : 335

மேலே