யார் பின்னால் யார்.
தேர்தல் ?
இது ஓர்
தேரில்லாத
திருவழா.
கிழங்களுக்கு
பல்லாக்கு
தூக்கும் பவழ
விழா .
இறந்தவர்கள்
இன்று
உயிர்த்தெழும்
உன்னத நாள்.
அடுத்த
தேர்தல் வரை
ஜனநாயகத்திற்கு
ஆயுள் தண்டனை
வழங்கி தீர்ப்பளிக்கும்
நாள் .
போலி
வாக்குகளுக்கு
புனித வாக்குகளை
பண்டமாற்று
செய்யும்
புது வித
சந்தை.
போலி நளன்களுக்கே
பூமாலையிட்டு
பொருத்திருக்கும்
புதிய
தமயந்திகள்
நாம் .
தேர்தலுக்கு முன்
நம் பின்னால்
அலைந்தவர்கள்
பின்னால் நம்மை
அலைய வைக்கும்
தலை விதியை
எழுதும் நாள்.
போனது தூக்கம்
போலீசுக்கு
வாய்ப்பு கிடைத்தது
வாரிசுக்கு.
ஆனாலும்
எல் .கே .ஜி
வரிசைக்கும்
குறைவு தான்
தேர்தல்
வரிசை.
இப்படி இருந்த
தேர்தலை
எப்படிமாற்றிவிட்டது
தேர்தல் கமிஷன்.
மாற்றங்கள்
மட்டும்தான்
மாறாமல்
இருப்பது போலும்.
மக்கள்
மறப்பார்கள்
மன்னிக்க
மாட்டார்கள்..
ஆனாலும்
பார்க்கலாம்
யார் பின்னால்
யார் என்று .?