தமிழன்னையின் தலைமகன் நீ
அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளல் நீ...
ஆற்றல் தந்திட ஆற்றங்கரையோரம் அணைக்கட்டிய மன்னன் நீ...
இமை திறந்த உன் விழியால் இருள் விலகியது என் மண்ணில்...
ஈடு இணையில்லை மக்கள் மீது நீ வைத்த பாசம்...
உலகம் போற்றிட படிப்போடு பசியறிந்து உணவு தந்த உத்தமர் நீ..
ஊரெங்கும் நீ திறந்த பள்ளிச்சாலையில் ஊக்கம் தந்தவர் நீ...
எண்ணமெல்லாம் என் நாட்டை எழுச்சி பெற வைத்த ஏழை பங்காளன் நீ...
ஏக்கமாய் என்னுள் ஒவ்வொரு நொடியும் வாழ்கிறேன்...
நீங்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையென்று...
ஐம்புலனும் துடிக்கிறது எம் தந்தையே நீவிர் வாழ்ந்த மண்ணில் உன் நினைவாய்...
ஒரு நாளும் தமக்காக வாழ்ந்ததில்லை...
ஓடமாய் ஓடினாய் எம் மக்கள் வளம் பெற...
ஔவை மண்ணின் தலைமகன் நீ...
எங்கள் மனதின் தலைவன் நீ..