கவிதை 101 எல்லோரும் எனைமறந்தனரே
பூஉலகத்திற்கு வந்தபின் முன்பிறப்பை நான் மறந்தேன்
குழந்தையாய் இருந்தபின் கவலையை நான் மறந்தேன்
துள்ளித் திரிந்தபின் சோர்வை நான் மறந்தேன்
பள்ளி சென்றபின் அறியாமையை நான் மறந்தேன்
கல்லூரி அடைந்தபின் செலவை நான் மறந்தேன்
வேலையில் ஏறியபின் இல்லாமையை நான் மறந்தேன்
தாய் மறைந்தபின் தாயன்பை நான் மறந்தேன்
தந்தை இறந்தபின் ஆதரவை நான் மறந்தேன்
திருமணம் செய்தபின் ஒரு தலைக்காதலை நான் மறந்தேன்
குழந்தைகளை கொஞ்சியபின் நேரத்தை நான் மறந்தேன்
ஓவியம் வரைந்தபின் உலகத்தை நான் மறந்தேன்
கவிதை படைத்தபின் கவலைகளை நான் மறந்தேன்
சகோதரன் கண்மூடியபின் தைரியத்தை நான் மறந்தேன்
மரணத்தை பார்த்தபின் ஜெனனத்தை நான் மறந்தேன்
சொத்துக்களை பிரித்தபின் பாசத்தை நான் மறந்தேன்
ஏமாற்றம் அடைந்தபின் பண்பை நான் மறந்தேன்
பொறுமை இழந்தபின் முகமலர்ச்சியை நான் மறந்தேன்
கோபம் அடைந்தபின் புத்தியை நான் மறந்தேன்
வாக்குவாதம் செய்தபின் நிதானத்தை நான் மறந்தேன்
தொலைதூரம் சென்றபின் உறவுகளை நான் மறந்தேன்
அதிகாரம் வந்தபின் மனிதநேயத்தை நான் மறந்தேன்
பதவிஉயர்வு வந்தபின் குடும்பத்தை நான் மறந்தேன்
குழந்தைகள் பிரிந்தபின் இன்பத்தை நான் மறந்தேன்
சோதனைகள் தாக்கியபின் இறைவனை நான் மறந்தேன்
வேதனைகள் தொடர்ந்தபின் என்னையே நான் மறந்தேன்
கணினியில் புகுந்தபின் எல்லாவற்றையும் நான் மறந்தேன்
கைபேசியில் பேசியபின் கேட்கும்திறன் நான் மறந்தேன்
முகநூலில் இணைந்தபின் காலத்தை நான் மறந்தேன்
பூனையோடு இருந்தபின் பிரிவை நான் மறந்தேன்
ஓய்வுற்று சாய்ந்தபின் எல்லோரும் எனைமறந்தனரே