எல்லாம் சிவமே
உலகெலாம் நிகழும் சிவமயமே
உன் உள்ளத்தில் குடி கொள்ளும்
தூய மனமே......
அகிலம் ஆளும் சிவாய அரசனே
அஞ்சி வரும் அடியோர்க்கு
பாச நேசனே......
உன்னடி தொழும் பக்தனுக்கு
இடர் களையும் பரம்பொருளே
தீராத வினைகளைத் தீர்த்திடும் திருவருளே......
தஞ்சமென்று வந்தோரெல்லாம்
நெஞ்சம் காணும் தீப ஒளியே...
காண இயலாதக் காற்றும் நீயே...
உலகெலாம் நிகழும் சிவமயமே......
பஞ்ச முகம் வடிவாக
அஞ்சு தொழில் செய்யும்
சைவத் திரு முதல் நாயகனே......
நெற்றிக் கண்ணோடு
நீல நிற கழுத்தோடு
நாகம் கொண்டு நீ சிவந்தவனே......
குளிரும் அந்த பிறை மதியை
நீண்ட சடை முடியில் வைத்தும்
ஆறாது சினத்தில் அக்னியானவனே......
ஆகாய கங்கை நதியே
அவனி தாங்கும் அளவில்
கருங்குழலின் வழி அனுப்பித்து
நீ பெயரும் பெற்றாய் கங்காதரனே......
காலத்தினும் முற்பட்டு
கருனை உருவான கடலும் நீதானே...
உலகெலாம் நிகழும் சிவமயமே.......
சாம்பல் வண்ண சரீரத்தில்
பாயும் புலித் தோலை வஸ்திரமாய்
உடுத்திய உமையவளின் உன்னத பதியே......
நின் தேகத்தில் நீங்காது பாதி
வலது நீயும் இடது சக்தியும்
அம்சம் பொருந்திய அர்த்தநாரீஸ்வரனே......
சூலம் ஏந்திய கரங்களிலே
உடுக்கை இசைக்கும் இனியவனே
நந்தியினை வாகனமாய் கொண்டு
இடுகாடு வாழும் சுடலை நாதனே......
தவ நிலையில் ஆழ்ந்திருக்கும்
கையிலாய மலை வாசனே
நடனமாடும் நடராஜனும் நீதானே
உலகெலாம் நிகழும் சிவமயமே......