ஐந்து முறை வரம்
சிவனை வணங்குவோர் கவனத்திற்கு,
பலமுறை சிவனை வணங்கினால் என்ன நடக்கும் தெரியுமா?
ஒரு பெண் தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று
பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.
பரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே!, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே!, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.
பரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.
ஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்பிய வண்ணமே நற்குணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.
“நான் ஒருவரைத்தான் மணக்க விரும்புகிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.
“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின் படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.