டுபுக்கு -ன்னு பேரு வையுடா
அம்மா, என்னோட ரண்டு கொழந்தைகளுக்கும் அழகான அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வச்சுட்டேன். எல்லாம் நா என்னோட பையனுக்கும் பொண்ணுக்கும் வச்ச ரண்டு இந்திப் பேருங்களும் ரொம்ப அழகான பேருங்கனு என்னப் பாராட்டாறாங்க. நீ மட்டும்தாம்மா நான் வச்ச பேருங்களக் கொற சொல்லறீங்க. சரி பரவால்ல.
@%@
ஏண்டா மவனே கதிரு இப்ப என்னடா சொல்ல வர்ற?
@#@
அம்மா என்னோட மூணாவது கொழந்தை பொறந்து மூணு நாளு ஆகுது. அதுக்கு என்ன பேரு வைக்கறதுன்னு தெரியாம கொழம்பிப் போயி இருக்கறம்மா.
@#@
இதுல என்னடா கொழப்பம். நாஞ் சொல்லியுங் கேக்காம இந்திப் பேரு வைக்கறது தான் தமிழர்களோட நாகரிகம்னு சொல்லி உம் பையனுக்கும் பொண்ணுக்கும் அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வச்சுட்டே. அந்தப் பேருங்கள எல்லாரும் "சுவீட்டு நேம்மு"னு பாராட்டாறங்கனு இதுவரைக்கும் நூறு தடவைக்குமேல சொல்லிருப்பே.
@#@
அத நான் மறுக்கலம்மா. ஆனா இப்ப பொறந்திருக்கற பையனுக்கு என்ன பேரு வைக்கறதுன்னு தெரிலிமா .நீயாவது ஒரு பேரச் சொல்லும்மா.
@%@
ஏண்டா கதிரு உனக்கு அர்த்தம் தெரியாத பேரு ஒண்ணு வேணும். இல்லையா?
@%@
ஆமாம்மா.
@%@
அந்த டிவி பொட்டில எம் மருமவ மங்கை ஒரு படம் பாத்திட்டு இருந்தா. நானும் கொஞ்ச நேரம் பாத்திட்டு இருந்தேன். அதுல ஒரு ஆச்சி வந்தாங்க. அவுங்க பேரு மனோகரம்மா ஆச்சினு மங்கை சொன்னா. அவுங்க அதுல ஒரு வார்தையைச் சொன்னாங்க. ஒடனே மங்கைகிட்ட அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கேட்டென். அவ தெரியாதுன்னு சொல்லிட்டா. நானும் பல பேருகிட்ட கேட்டுப்பாத்தேன். யாருக்குமே அந்த ஆச்சி சொன்ன வார்தைக்கு அர்த்தம் தெரில.
@%@
அந்த மாதிரி பேருதாம்மா எனக்கு வேணும். சீக்கிரம் சொல்லும்மா.
@%@
சொல்லறண்டா சொல்லறென். கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்து சொல்லறென். (5 நிமிடம் சென்றபின்)
அந்த வார்த்த....
@%@
அந்த வார்த்தை .... சொல்லும்மா.
@%@
டுபுக்கு!
@%@
ரொம்ப நன்றிம்மா. யாருக்கும் அர்த்தம் தெரியாத அந்த வார்த்தை உம் பேரனோட பேரும்மா. நாளைக்கு கொழந்தையையும் மங்கையையும் வீட்டுக்கு அழச்சிட்டு வர்றேன். நீ கொழந்த காதுல மூணு தடவ ' டுபுக்கு, டுபுக்கு, டுபுக்கு'னு சொல்லிடும்மா.
@%@
சரிடா கதிரு. நீ சொல்லி எதையாவது நாஞ் செய்யமாட்டேன்னு சொல்லிருக்கறனா? எஞ் செல்ல டுபுக்கு பையனையும் எம் மருமவளையும் ஊட்டுக்கு அழச்சிட்டு வா மத்தத நாம் பாத்துக்குறேன்.