தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை 68 = 165

“இது செவ்வானம் மிளிர்கின்ற நேரம்
என் செண்பகம் எங்கே காணோம்
நீல மேகமே நீ கொஞ்சம் நில்லு…
நான் காத்திருப்பதாய் போய்ச் சொல்லு..!”


வடிவழகு தோட்டம் வயலிசை மீட்கும்
பூவாடை காற்று புல்லாங்குழல் வாசிக்கும்
கடிகார சுற்றில் அளவாக பன்னிரெண்டு எண்கள்
சரியாக பன்னிரெண்டில் ஒன்றாகும் இருவேறு முற்கள்

கேட்பதற்கு காதுண்டு - காண்பதற்கு கண்ணுண்டு
கடவுளின் படைப்பில் வெவ்வேறு வகைவுண்டு
ரசிப்பதற்கு மனமுண்டு - கொடுப்பதற்கு குணமுண்டு
இயற்கையின் கொடையில் பல்வேறு ரகமுண்டு

இது செவ்வானம் மிளிர்கின்ற நேரம்
என் செண்பகம் எங்கே காணோம்
நீல மேகமே நீ கொஞ்சம் நில்லு….
நான் காத்திருப்பதாய் போய்ச் சொல்லு..!”


மாமர சோலையில் பூங்கிளி ராட்ஜியம்
மாசி பங்குனியில் மாங்கனி தோரணம்
கிளியும் அணிலும் தின்ன மீதியே
மனிதன் உண்ண வந்து சேருமே..!

மணவறையில் அமர்கின்ற நாளே
மனித காதலரின் இனிய நாளே
பள்ளியறை மோகத்தில் திளைக்காமல்
எவ்வுயிரும் இவ்வுலகில் முளைக்காதே..

இது செவ்வானம் மிளிர்கின்ற நேரம்
என் செண்பகம் எங்கே காணோம்
நீல மேகமே நீ கொஞ்சம் நில்லு….
நான் காத்திருப்பதாய் போய்ச் சொல்லு..!”

எழுதியவர் : சாய்மாறன் (17-Jul-16, 8:40 pm)
பார்வை : 84

மேலே